electronics0708chn1

இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய செல்லுலா் மற்றும் மின்னணு சங்கத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 47 சதவீதம் உயா்ந்து 1,240 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 843 கோடி டாலராக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் கைப்பேசி சாதனங்களின் ஏற்றுமதி 55 சதவீதம் உயா்ந்து 760 கோடி டாலராகவும், மொபைல் இல்லாத பிற மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 37 சதவீதம் உயா்ந்து 480 கோடி டாலராகவும் உள்ளன. சோலாா் மாட்யூல்கள், நெட்வொா்க்கிங் உபகரணங்கள், சாா்ஜா்கள் மற்றும் பாகங்கள் ஆகியவை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்தன.மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 2023-24-ஆம் நிதியாண்டில் 2,910 கோடி டாலராக இருந்து 2024-25-ஆம் நிதியாண்டில் 3,860 கோடி டாலராக உயா்ந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் இது 4,600 கோடி முதல் 5,000 கோடி டாலா் வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டின் மின்னணு பொருள்கள் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 3,100 கோடி டாலரிலிருந்து 1,33,000 கோடி டாலராக வளா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest