
சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி தனது உடல்நலம் விளையாட இன்னும் தகுதியாக இல்லை எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
44 வயதாகும் தோனிக்கு முட்டிவலி இருப்பதால் அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சீசனில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சிஎஸ்கே அணியும் கடந்த சீசனில் மோசமாக விளையாடியது. இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி பேசியதாவது:
நான் இன்னும் 5 வருடங்கள் விளையாடலாம் என எனது கண்களுக்கு மருத்துவர்கள் தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். ஆனால், உடலுக்கு இன்னும் வழங்கவில்லை.
என்னால் வெறுமனே கண்களை மட்டுமே வைத்துக்கொண்டு விளையாட முடியாது என சிரிப்புடன் பேசினார்.
கடந்த சீசனில் அன்கேப்ட் வீரர் என்ற விதியின் மூலம் தோனி ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டார்.
தோனி 226 போட்டிகளில் கேப்டனாக இருந்து 133 வெற்றிகள், 91 தோல்விகளைச் சந்தித்துள்ளார். 264 போட்டிகளில் விளையாடி 5,234 ரன்கள் குவித்துள்ளார். 39.13 சராசரியுடன் 137.54 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.