
நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள், 2024 ஆம் நிதியாண்டில் 63.44 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2018 – 2024 இடைப்பட்ட நிதியாண்டுக் காலத்தில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த குறிப்பிட்ட அதிகரிப்பானது வேலையின்மை விகிதங்கள் குறைவு, தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பானவற்றில் நேர்மறையான முன்னேற்றங்களைக் காட்டுகிறது.
இதே காலகட்டத்தில் 15 வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களின் விகிதமும் 49.8 சதவிகிதத்திலிருந்து 60.1 சதவிகிதமாக உயர்ந்ததுடன், தொழிலாளர்களின் விகிதமும் 46.8 சதவிகிதத்திலிருந்து 58.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
2020-ல் 28.7 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2024-ல் 40.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2018-ல் 6 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, 2024-ல் 3.2 சதவிகிதமாகக் குறைந்தது.
இதையும் படிக்க: டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!
Workforce Touches 64.33 Crore in FY24 from 47.5 Crore in FY18