edapadipalani16805888924411717510019355

மத்திய அரசின் 71-வது தேசிய விருது நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து பதிவில், “71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழிப் படங்களிலிருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் திரைப்பட இயக்குநர் திரு. ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,

தேசிய விருது வென்ற கலைஞர்கள்
தேசிய விருது வென்ற கலைஞர்கள்

பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் திரு. M. S. பாஸ்கர் அவர்களுக்கும், வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் திரு. ஜி.வி அவர்களுக்கும்,

லிட்டில் விங்ஸ் ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும், மேலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக்கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி

தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest