
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட லியாம் டாசன் தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் கடந்த 2016-இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானவர் லியாம் டாசன்.
தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுடன் விளையாட தேர்வாகியுள்ளார். 35 வயதாகும் லியாம் டாசன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மான்செஸ்டரில் வரும் ஜூலை 23ஆம் தேதி இந்தியாவும் இங்கிலாந்தும் 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட இருக்கிறது.
ஜடேஜா அடித்த பந்தினை தடுக்கும்போது சோயிப் பஷீருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்துடனே பந்துவீசி சிராஜ் விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமானார்.
சுண்டு விரலில் எலும்பு முறிவால் அவதிப்பட்டுவரும் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு மாற்றாகத்தான் லியாம் டாசன் களமிறங்குகிறார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, லியாம் டாசன், பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.