
சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்த விராட் கோலிக்கு ஐபிஎல் சென்னை அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.
விராட் கோலியை வாழ்த்திய சென்னை அணி, ரன் மெஷின் (Run machine), சாதனை முறிப்பாளர் (Record Breaker) மற்றும் விளையாட்டின் மீது இடைவிடாத ஆர்வம் கொண்டவர், இந்த நாளில்தான் அறிமுகமானார் என்று பதிவிட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 18 ஆம் தேதியில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி, தனது முதல் பயணத்தை தொடங்கினார். இந்திய அணிக்கு அதிகளவில் ஓட்டங்களைக் குவித்ததால், ரன் மெஷின் என்று ரசிகர்களின் பட்டத்தையும் பெற்றார்.
27,599 சர்வதேச ரன்கள், 82 சதங்கள் மற்றும் ஏராளமான இன்னிங்ஸ்களையும் தன்வசம் வைத்துள்ளார், கோலி.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 9,230 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 40 வெற்றிகளை கோலி பெறச் செய்துள்ளார்.
தற்போது 36 வயதாகும் கோலி, இங்கிலாந்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் விடியோவும் இன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.