1375846

மாஸ்கோ: புற்​று​நோய்க்கு தடுப்​பூசி உரு​வாக்​கும் பணி​யில் ரஷ்​யா​வின் தேசிய கதிரியக்க மருத்​துவ ஆராய்ச்சி மைய​மும் ஏங்​கல்​ஹார்ட் மூலக்​கூறு உயி​ரியல் நிறு​வன​மும் இணைந்து செயல்​பட்டு வந்​தன. பல ஆண்டு கால முயற்​சி​யின் பலனாக புற்​று​நோய்க்கு என்ட்​ரோமிக்ஸ் என்ற தடுப்​பூசியை உரு​வாக்​கி​யுள்​ள​தாக அவை அறி​வித்​தன.

கரோனா தடுப்​பூசிகளைப் போலவே அதே எம்​-ஆர்​என்ஏ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இது உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. புற்​று​நோய் செல்​களை நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்​டலம் அடை​யாளம் கண்டு அகற்​றும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest