
காத்மாண்டு: பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அவற்றை பயன்படுத்த முடியாமல் இளைஞர்கள் தவித்து வந்தனர்