
சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றத்தைத் தொடர்ந்து மதர் டெய்ரி அதன் பால் மற்றும் உணவு வரிசையில் விலை குறைப்பை அறிவித்தது. இது நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக அமையும் என்றது.
அதே வேளையில் செப்டம்பர் 22 முதல் இந்த விலை பட்டியல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பல அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை நீக்கியதை தொடர்ந்து இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. மதர் டெய்ரி இது குறித்து தெரிவிக்கையில், தற்போது அனைத்து சலுகைகளும் பூஜ்ஜிய வரி வரம்புக்குள் அல்லது குறைந்தபட்சம் 5% அடுக்கில் வரும் என்றது.
பன்னீர், வெண்ணெய், சீஸ், நெய், மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இனி மலிவு விலையில் கிடைக்கும் என்றது.
500 கிராம் வெண்ணெய் பேக்கின் விலை ரூ.305ல் இருந்து ரூ.285 ஆகக் குறையும். அதே நேரத்தில் பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ரூ.35க்கு பதிலாக ரூ.30க்கு இனி கிடைக்கும்.
