COVER

கஷ்டங்களை எல்லாம் நீக்கி காரிய ஸித்தி அளிக்கும் தேய்பிறை அஷ்டமி மகாகால பைரவ பூஜை! உங்கள் பிரச்னை எல்லாம் இன்றோடு தீர்ந்து போய்விட்டது என்று நம்புங்கள்! பங்கு கொள்வது எப்படி! 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.

மகாகால பைரவ பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஈசனின் 64 வடிவங்களுள் வேகவடிவம் கொண்டவர் கால பைரவர். காலத்தின் அதிபதியாகவும் ஈசன் ஆலயத்தின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். அந்தகாசுரனை அழிக்க சிவனில் இருந்து தோன்றியவர் பைரவர். காசி இவரது க்ஷேத்ரம் என்றாலும் இந்தியா முழுக்க பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் இவர் அருள்பாலிக்கிறார். க்ஷேத்ர பாலர் என வரலாற்றுக் காலம் தொட்டே தமிழகத்தில் வணங்கப்பட்டு வருகிறார். காசியில் அஷ்ட பைரவரும் தேசமெங்கும் 64 பைரவர்களும் அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அறியலாம்.

ஆனால் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் பகுதியில் வேறெங்கும் காண முடியாத வகையில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் ஆலய முகப்பு, கருவறை, பிராகார மண்டபத்தின் மேற்பகுதியில் என இந்த ஆலயத்திலேயே 64 பைரவர்களையும் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவியும் இந்த தலத்தை மிதித்தாலே போதும், உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி நிம்மதியும் வெற்றியும் கிடைக்கும் என்பது இன்றுவரையுள்ள நம்பிக்கை.

மகாகால பைரவ பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சனீஸ்வரரின் குருவாகவும், 12 ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களின் தலைவராகவும் பைரவர் இருப்பதால் இவரை வணங்கினாலே வாழ்வின் சகல துக்கங்களையும் மாற்றி அமைதியும் வளமும் பெறலாம் என்பது ஆன்றோர்கள் வாக்கு. கால பைரவரை வழிபடுபவர்கள் தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவார்கள். வம்பு வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள், தீராத கடனால் அவதிப்படுபவர்கள், தொழில் வியாபார வீழ்ச்சி, பொருளாதார சிக்கலில் தவிப்பவர்கள், நவகிரகப் பிடியில் துன்பங்களை அனுபவித்து வருபவர்கள், எதிரிகள் தொல்லையால் தவிப்பவர்கள் என யாராக இருந்தாலும் இங்கு வந்து வணங்க பலன் கிடைக்கும் என்பது உறுதி.

சகல ஜனங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய அனுமதிக்கப்படும் இந்த புண்ணிய பூமியில் ஆதியில் 64 கோடி யோகினியரும் நவகோடி சித்தர்களும் கூடி இந்த மகாகால பைரவரை உபாசித்து தவம் இருந்தார்களாம். பிறகு இந்த ஆலயம் தற்போது ஆதிசித்தர். ஸ்ரீவிஜய் சுவாமிகளுக்கு கிடைத்த உத்தரவால் இங்கு பிரமாண்டமாக எழும்பியுள்ளது.

மகாகால பைரவ பூஜை

அமாவாசை, பௌர்ணமி சிறப்பு யாகங்களும் அஷ்டமி, ராகு கால பூஜைகளும் இங்கு விசேஷம். கடன், வழக்கு, நோய்கள், ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மங்கல காரியங்களில் தடை என எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்பது உறுதி. அமைதியான வாழ்வு பெறவும் ஐஸ்வர்யம் பொங்கும் அதிசயம் காணவும் தேய்பிறை அஷ்டமி மகாகாலபைரவ பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

மகாகால பைரவ பூஜை

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு தேய்பிறை அஷ்டமி மகாபூஜை நடைபெற உள்ளது. இந்த வைபத்தால் இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி கிடைக்கும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சியைப் பெருக்கும் இந்த சிறப்பு காலபைரவ பூஜையில் சங்கல்பித்துக் கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

MAHA KALABAIRAVA POOJAI – QR CODE

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest