‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் ஜோவாக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் யுதன் பாலாஜி.

அந்த சீரியல் இவருக்கு ஏற்படுத்தித் தந்த புகழைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார்.

ரோஹன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘பட்டாளம்’ படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

Yuthan Balaji Marriage
Yuthan Balaji Marriage

பிறகு ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக பாபி சிம்ஹாவுடன் ‘வெள்ளை ராஜா’ சீரிஸில் நடித்திருந்தார். அதிலும் `காதல் சொல்ல வந்தேன்’, `பட்டாளம்’ போன்ற படங்களின் பாடல் ஆல்பம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட்.

`வெள்ளை ராஜா’ வெப் சீரிஸுக்குப் பிறகு அவர் நடிப்பின் பக்கம் வரவில்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருப்பதாகத் தொடர்ந்து அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது.

பிறகு, 2018-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் சுஜிதா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார்.

இவருடைய திருமணத்திற்கு தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest