20250515252F

கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமானதாக இல்லை என்றும் 12% வரி விதிப்பின் மூலமாக 8 ஆண்டுகளாக மக்களை பாஜக அரசு சுரண்டியுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இதையடுத்து மின்னணு பொருள்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. வருகிற செப்.22 முதல் இந்த ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,

“12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்…

5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை?

கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

Did the government not exploit the Indian consumer by levying 12 per cent during the last 8 years? – Congress Leader P chidambaram

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest