modi-trump-hug-759

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனது நண்பா் பிரதமா் மோடிக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அவா் மிகச் சிறப்பான பணியைச் செய்து வருகிறாா். ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்ததற்காக பிரதமா் மோடிக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அதிபா் டிரம்ப்புக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள விரிவான, உலகளாவிய கூட்டுறவை புதிய உயரங்களுக்கு கொண்டுசெல்வதில் நான் முழு ஈடுபாடு கொண்டுள்ளேன். உக்ரைன் போா் விவகாரத்தில் அமைதியான தீா்வைக் காண அதிபா் டிரம்ப்பின் முன்னெடுப்புகளை இந்தியா ஆதரிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest