
சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக ‘கிஸ்’ உருவாகியிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, வி.ஜே. விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில் பேசிய நடிகை ப்ரீத்தி, “இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப பேஷனோட இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், இந்தப் படம் ஆரம்பிச்ச ஷூட்டிங் ஸ்பாட்லிருந்து இப்போ வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. அயோத்தில என்னைப் பார்த்ததுக்கும் இந்தப் படத்துல என்னைப் பார்க்குறதுக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும்.
ரொம்ப எனர்ஜிடிக்கான கேரக்டர் என்னுடையது. சிம்பிளா சொல்றதா இருந்தா சதீஷ் மாஸ்டரோட கேர்ள் வெர்ஷனாதான் நடிச்சிருக்கேன்.
இந்தப் படத்துல என்னுடன் பணியாற்றிய எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன். கண்டிப்பா படம் பாருங்க” எனக் கொஞ்சும் தமிழில் பேசி முடித்தார்.
தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இது என்னுடன் கவின் அண்ணாவின் மூன்றாவது படம். இந்தப் படக்குழு ரொம்ப ஜாலியான டீம்.
என்னை நம்பிய சதிஷ் அண்ணாவுக்கும், கவின் அண்ணாவுக்கும் நன்றி. இந்தப் படத்தின் ஆல்பத்தில் 7 பாடல்கள் இருக்கின்றன. அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்தவர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடியிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார். எங்களுக்காக வந்த அனிரூத், விக்னேஷுக்கும் நன்றி” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…