siddaramaiah

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே, யூ டியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்ற பிறகே செயல்பட அனுமதிக்கும் நடைமுறையைக் கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தை திறந்துவைத்த பின்னர் பேசிய முதல்வர் சித்தராமையா,

“செய்தி சேனல்கள் தொடங்கவும் செய்திகளை ஒளிபரப்பவும் கண்டிப்பாக உரிமங்கள் தேவை. ஆனால், யூ டியூப் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் செய்திகளை ஒளிபரப்ப உரிமம் தேவையில்லை என்ற நிலை இருந்தது. தற்போது யூ டியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களும் செய்தி ஒளிபரப்ப உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுகுறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்” என்று கூறினார்.

மேலும், “மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான நடைமுறைகளில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு” என்றும் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.

முன்னதாக, யூ டியூப் சேனல்கள் ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதனால் மின்னணு ஊடகங்களுக்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக வேண்டும் என்று மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கம், முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளது.

Karnataka to explore licencing norms for private YouTube channels to check blackmail

இதையும் படிக்க | 3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest