
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பழங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (என்எச்44) கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது. கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்தது.
இந்த நிலையில், இந்த தடை இன்று நீக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் கூறினார்.
கனரக வாகனங்களின் இயக்கம் தொடர்பான போக்குவரத்து ஆலோசனையைப் பின்பற்றி, நெடுஞ்சாலையில் முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் இடைவிடாத மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நெடுஞ்சாலை பெரும் சேதத்தைச் சந்தித்தது, இதனால் முக்கிய சாலைகள் மூடப்பட்டது.