
லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, நேற்று லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் யி, " சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. மேலும் சீனா, அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு மோதல்களுக்கு அரசியல் தீர்வை உருவாக்கவும் முயற்சிக்கிறது.