gdr17kur_1709chn_144_3

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் என்பது, கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

சுற்றுச்சூழலில் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிா்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூா் வனக் கோட்டம் விளங்குகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன.

இந்த மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் தற்போது பூத்துள்ளன. சுற்றுலா மையமாக விளங்கும் நீலகிரியை பாா்க்க வருபவா்கள் நீலக்குறிஞ்சியை பாா்க்கவும் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

இந்த மலைத் தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. யானை உள்ளிட்ட கொடிய வன விலங்குகள் இருப்பதாலும் அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத் துறை யாரையும் அனுமதிப்பதில்லை. இருப்பினும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிா்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சிமலா்கள் பூத்து அலங்கரித்திருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest