Screenshot-2025-01-27-110925

பங்குச் சந்தை 4-ம் நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 340.34 புள்ளிகள் அதிகரித்து 83,029.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.05 புள்ளிகள் உயர்ந்து 25,424.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

8 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச் சந்தை இந்த வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் சரிந்து முடிந்த நிலையில் அதன்பிறகு தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தமாகி வருகிறது.

இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது உள்ளிட்டவை பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பிஎஸ்இ-யில், இன்ஃபோசிஸ், எச்.சி.எல்.டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே நேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக சரிவை சந்தித்தன.

Stock Market: Sensex up 350 pts; Nifty holds 25,420

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest