WhatsApp-Image-2025-09-17-at-4.27.52-PM

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாளான நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

வருடந்தோறும் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் இம்முறை கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி கலந்து கொண்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர், நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா. சுப்ரமணி ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் யுகபாரதி
பெரியார் பல்கலைக்கழகத்தில் யுகபாரதி

விழா தொடக்கத்தில், பேராசிரியரும் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளருமான வை. ராஜ், பெரியாரைப் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அவரைத்தொடர்ந்து, கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா. சுப்ரமணி, யுகபாரதியின் இளம் வயது இடதுசாரி வாழ்க்கையைப் பற்றியும், அவரது குடும்பச் சூழ்நிலை பற்றியும் மாணவர்கள் மத்தியில் தலைமையுரையாற்றினார்.

பின்னர், `பெரியாரைத் துணைகோடல்’ என்ற தலைப்பில் யுகபாரதி உரையாற்றத் தொடங்கினார்.

தனது உரையில் யுகபாரதி, “இந்த அவையில் நான் முக்கியமாகப் பேசும் இரு கருத்துகள், அறமும் அறிவும்.

பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரும் விட்டுச் சென்ற பாதை, தமிழ்நாட்டின் கனவு மற்றும் முன்னேற்றத்துக்கானது.

உலகத் தலைவர்களான அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரைப் பற்றிப் பேசினாலும், பெரியாரைப் பற்றி ஒருபோதும் பேசாமல் இருக்க முடியாது.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

அனைவரும் இலக்கியம் படியுங்கள். கல்வி ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மேலானது. என்னுடைய நிறைய பாடல்களில் கல்வியை ஆயுதமாக்கி எழுதியிருப்பேன்.

தமிழ் அரசியல், இலக்கிய மரபு என அனைத்தையும் கூறும் சிறப்பினைப் புறநானூற்றின் `கற்கை நன்றே’ பாடல் விளக்கும். அதையும் படியுங்கள்.

நான் இன்று இந்த அளவிற்குப் பாடல் அமைக்கிறேன் என்றால், சங்கப் பாடல்களே காரணம். அகநானூறு, புறநானூறு, நெடுஞ்செழியனின் ஆரியப்படை ஆகிய பாடல்களைப் படியுங்கள்.

நீங்கள் அனைவரும் கேட்ட `ரம்மி’ படப் பாடலான `அடியே என்ன ராகம்’ பாடலில், புறநானூறு பெண்பாற் புலவர்கள் பாடிய பாடலைப் பயன்படுத்தினேன்.

கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர். சினிமாவை அரசியல் போல் மாற்றியவர்.

`மலைக்கோட்டை’ படத்தில் பாடல் எழுதியதற்கு அவர் வாழ்த்து சொல்ல அழைத்தபோது, நான் பயந்து செல்லவில்லை.

யுகபாரதி
யுகபாரதி

சில வருடங்கள் கழித்து ஒரு விழாவில், `உன்னை அன்னைக்கு வரச் சொன்னேனே, ஏன் வரவில்லை? அந்தப் பாடல் அருமையாக இருந்தது’ என்று கலைஞர் சொன்னார்.

அப்போதுதான் மீண்டும் அந்தப் பாடலை கேட்டு, கலைஞர் சொல்வது சரியென்று நம்பினேன் என்று கூறி, இறுதியாக ஒரு கவிதையை வாசித்து விடைபெற்றார் யுகபாரதி.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest