Rain_weather_bike_road_edi

தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 30 districts in Tamil Nadu until 10 am.

இதையும் படிக்க : இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest