மன அழுத்தத்தால் உடல் நலமும் பாதிப்படையும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பற்களும் பாதிப்படையும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹேமா மாலதி.

”கோபத்தில் இருக்கும்போது நம்மை அறியாமல் நம் பற்களைக் கடிப்போம். இப்படி கடிப்பதனால் பற்களில் எனாமல் தேய்மானம் அடையும். சில சமயங்களில் பற்களில் விரிசல்களும் ஏற்படும்.

மன அழுத்தத்துக்கும் பற்களுக்கும் என்னத் தொடர்பு?
மன அழுத்தத்துக்கும் பற்களுக்கும் என்னத் தொடர்பு?

தலைப்பகுதியில் காணப்படும் ஒரே ஒரு மூட்டு டி.எம். ஜாயின்ட். இதுதான் தாடையை அசைப்பதற்கு பயன்படுகிறது. இதன் சமநிலை மன அழுத்தத்தால் மாறுகிறது. இதனால் தீராத தலைவலி, வாயைத் திறக்க முடியாத‌ நிலை மற்றும் தாடை வலியும் ஏற்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக, அடிக்கடி பற்களைக் கடித்தால், கடிபடுகிற இடங்களில் எனாமல் தேய்ந்து குழி போன்று தோன்றும். ஒரே பற்களில் மூன்று முதல் நான்கு இடங்களில்கூட குழி போன்று ஏற்படும்.

மன அழுத்தத்துக்கும் பற்களுக்கும் என்னத் தொடர்பு?
மன அழுத்தத்துக்கும் பற்களுக்கும் என்னத் தொடர்பு?

மன அழுத்தம் காரணமாக கோபத்தில் பற்களை இறுக்கமாக கடிப்பதால் தசைகள் பாதிப்படையும். இதனால் பற்களில் கூச்சம், பற்களில் விரிசல் ஏற்படுதல் மற்றும் தலைவலியும் ஏற்படும்.

மேலும் மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். உமிழ்நீர்தான் தான் பற்களை பாதுகாக்கிறது.

உமிழ்நீர் குறைவாக சுரப்பதால் பற்களில் அதிக அளவில் சொத்தை ஏற்பட்டு, ஈறுகளும் பாதிப்படையும். மேலும் வாயில் துர்நாற்றமும் வீசக்கூடும்.

மன அழுத்தத்தின் போது நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதனால், ஈறுகளில் எளிமையாக நோய்த்தோற்று ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், பற்களையும் எலும்புகளையும் இணைக்கும் பகுதி பாதிப்படைந்து பற்கள் ஆட ஆரம்பிக்கும்.

மன அழுத்தத்தினால் வாய்ப்புண் அதிமாக ஏற்படும். இதனால் நாக்கும் உதடுகளும் மிகுந்த எரிச்சலைடைகின்றன.

பல் மருத்துவர் ஹேமா மாலதி.
பல் மருத்துவர் ஹேமா மாலதி.

அந்தக் காலத்தில் பெரியவர்களுக்குத்தான் அதிகளவில் இதுபோன்ற பற்கள் சார்ந்த பிரச்னைகள் இருந்து வந்தது. ஆனால், இந்தக் காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் இந்த வகை பல் பிரச்னையால் பாதிக்கின்றனர்.

* ஒரு நாளில் காலை மற்றும் இரவு என இருவேளை பல் துலக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கு இருமுறை பற்களை சோதனை செய்ய வேண்டும்.

*சரியான டூத் பேஸ்ட் மட்டும் மிருதுவான டூத் பிரஷ் பயன்படுத்துவது மிக அவசியம்.

* இரண்டு பற்களுக்குகிடையில் உள்ள துகள்களை வெளிக்கொண்டுவர வாட்டர் ஃபிளாசரை பயன்படுத்தவும்.

* தினந்தோறும் காலையில் பல்துலக்கிய பின்பு நாக்கை வழிக்க வேண்டும்.

* இனிப்பு நிறைந்த உணவுகள், பேஸ்ட்ரி உணவுகள், பிஸ்கட்ஸ் போன்ற உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* பழங்கள்,‌ சால்ட் போன்ற மென்று உண்ணும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால், ஈறுகள் வலிமையடையும்.

*தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால், உமிழ்நீர் அதிகரிக்கும். உமிழ்நீர் நம் பற்களை பாதுகாக்கும்.

*ஆல்கஹால் , புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* முக்கியமாக பற்களைக் கடிக்காதீர்கள்’’ என்று முடித்தார் பல் மருத்துவர் ஹேமா மாலதி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest