
தொழிலதிபர் அனில் அம்பானியின் மீதான வழக்கில் ரூ.2,796 கோடி கையாடல் செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான அனில் அம்பானியின் நிறுவனங்களில், யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூர் விதிகளை மீறி முதலீடு செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. முதலீடு செய்யப்பட்ட பணத்தை கொஞ்சம்கொஞ்சமாக கையாடல் செய்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும், ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களுக்கும் இடையிலான மோசடி பரிவர்த்தனைகளால் யெஸ் வங்கிக்கு ரூ.2,796 கோடி இழப்பு ஏற்பட்டதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அனில் அம்பானி, ராணா கபூர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உள்பட மோசடியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?