
ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ரெட்ட தல திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆக்சன் திரில்லர் படமான இதில் நாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
இந்த நிலையில், கண்ணம்மா எனப் பெயரிட்ட இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்துள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.