
தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர், இந்த வழக்கின் ஜாமீன் விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடந்த வன்முறையில் 53 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, சந்தேக நபர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இருப்பினும், மனுக்கள் மீது விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்ட போது, இணை மனுக்கள் தாமதமாக அதிகாலை 2.30 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டதால், மனுக்களை முழுமையாகப் படிக்க நேரம் போதவில்லை என்று கூறி, விசாரணையை செப்.19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜாமீன் மீதான விசாரணை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற வாசலிலேயே சாக்கடைக் கழிவை அகற்றிய தொழிலாளர்கள்! ரூ. 5 லட்சம் அபராதம்!