vasugi

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”11 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் அராஜகம்தான் தலைவிரித்தாடுகிறது. லண்டனுக்குச் சென்றுதான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா?

பொதுக்கூட்டம்

இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம். பல்வேறு கட்சிகளுக்கு பின்னால் இன்று இளைஞர்கள் இருக்கின்றனர். த.வெ.க-விற்கு பின்னால், சீமான் கட்சிக்கு பின்னால், திராவிட கட்சிகளுக்கு பின்னால், நம்முடைய கட்சியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். இளைஞர்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற முடியும். விவேகானந்தர் மிக அழகாகச் சொன்னார்… 20 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று.  உங்களது வாழ்க்கையில் இருந்து மாற்றத்தை துவங்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். விஜய் சொல்லுகிறாரா?

அவருடைய தம்பிகளுக்கு, சீமான் சொல்லுகிறாரா? அவருடைய தம்பிகளுக்கு மற்ற பல கட்சிகள் அவர்களது உறுப்பினர்களுக்கு சொல்லுகிறார்களா? என்கிற கேள்வியை நான் கேட்கிறேன். ”மதுவிலக்கு வேண்டும்” என்று குரல் உயர்த்தி பேசுகிற பல கட்சிகள் அவர்களது உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு இன்ச் ஆவது முயற்சி எடுத்து இருப்பார்களா? தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார். இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள்.

உ.வாசுகி

இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. தி.மு.கவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள் என கம்யூனிட்டுகளை சொல்கிறார். தி.மு.க உங்களை விழுங்கி விடும் என்கிறார். தி.மு.க பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. அ.தி.மு.க-தான் தவளை. பா.ஜ.க-தான் பாம்பு . அ.தி.மு.க-வை பா.ஜ.க-தான் விழுங்கிக்கொண்டு இருக்கிறது.  நீங்க பாதி உள்ள போய்ட்டீங்க. தவளையோட கை, கால்தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு. கட்சியின் உள்விவகாரத்தில் அமித் ஷா தலையிடுகிறார். அவருடைய வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது.

அ.தி.மு.க ஏற்கனவே  இரண்டு, மூன்று பிரிவாக இருக்கிறது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து டி.டி.வி. தினகரன் வெளியேறி விட்டார். தே.மு.தி.க தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டார்.  எங்களுக்கு கூட்டணி தர்மம் கிடையாது. எங்களுக்கு மக்கள் தர்மம்தான் உண்டு.

பொதுக்கூட்டம்

கூட்டணி வைப்பதும் மக்களின் நலனுக்காக அதனால் அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ… அப்போது எந்த கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம். த.வெ.க தலைவர் விஜய் மேடை ஏறி பேசுகிறார். நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் ’சுபிட்சம்’ ஆகிவிடும் என்று, எப்படி ஆகும்? உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? இன்றைக்கு நீங்கள் எந்தெந்த அரசுகளை குறை சொல்கிறீர்களோ அந்த அரசு பின்பற்றுகிற கொள்கைகளுக்கு மாற்றாக நீங்கள் என்ன கொள்கை வைத்திருக்கிறீர்கள்?  நாங்கள் மாற்று கொள்கை வைத்துள்ளோம். நீங்கள் உங்களது கொள்கையை எப்போது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest