ANI_20240713063724

இந்திய நாட்டில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது நமது நாட்டில் வாழும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஹூரூன் இந்திய செல்வ அறிக்கை 2025-ன்படி, நாட்டில் கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதில் குறிப்பாக மும்பை மாநகரம், கோடீஸ்வர குடும்பங்களின் தலைநகரமாக விளங்குகிறது.

இந்திய செல்வ அறிக்கை 2025 – 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட சொத்துகளை உடைய குடும்பங்கள் கணக்கிடப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இந்த சொத்து மதிப்பைக் கொண்ட 8 லட்சத்து 71 ஆயிரத்து 700 குடும்பங்கள் இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா, இவ்வாறு பெரும் செல்வந்தர்களைக் கொண்ட நாடாக இருந்திருக்கவில்லை. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு 1.59 லட்சம் (1,599,900) கோடீஸ்வர குடும்பங்கள்தான் இருந்தன. இது கடந்த 2021-ஆம் ஆண்டிலோ 4.58 லட்சமாக (4,58,000) இருந்தது. ஆனால், வெறும் 4 ஆண்டுகளில் தற்போது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8.71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest