202502233335880

ராவணன் மனைவி மண்டோதரியாக ஹிந்தி நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு பாஜகவிலிருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.

தில்லியில் புகழ் பெற்ற நாடக சபையான ‘ராம் லீலா குழு’ பிரபல ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவை ராமாயண காதை நாடகத்துக்கு ஒப்பந்தப்படுத்தியுள்ளது. அதில், இலங்கை வேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரியாக அவர் நடிக்கவிருக்கிறார்.

செப். 22 முதல் ஆரம்பமாகும் ராம் லீலா அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்க இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வருகை தருவார்கள். இந்த நிலையில், சர்ச்சைக்ளில் அவ்வப்போது சிக்கிக்கொளும் நடிகை பூனம் பாண்டே அந்தக் கதாபாத்திரமேற்றால் பொருத்தமாக இருக்காது என்பதே இதற்கான முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் (விஎச்பி) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறொருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

Delhi Ramleela committee signs Poonam Pandey to play ‘Mandodari’; BJP, VHP seek replacement

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest