
திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.
இன்று நாகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் விஜய்யைக் காண ஏராளமான கூட்டம் கூடியிருக்கிறது. இப்படியாக விஜய் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது.

இதுகுறித்து அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விஜய்க்கு கூடும் கூட்டத்தைக் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
மேலும், விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் மின்கம்பங்கள் அருகே ஏறி நிற்பதால் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையின் பெயரில் தான் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும் மின்சார துண்டிப்பிற்கு திமுகவை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
“வேண்டாம் சி.எம். சார், இந்த அடக்குமுறை” – நாகையில் விஜய்!

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் ஆர்.எஸ்.பாரதி, “திமுகவிற்குக் கூடுவது கொள்கைக்கான கூட்டம். மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். விஜய் பிரசாரம் செய்யும் பகுதியில் நாங்கள் வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs