PTI09202025000434B

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியைத் தழுவியது. புது தில்லி அருன் ஜெட்லி திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்து 47.5 ஓவர்களில் ஆட்டமிழந்தது.

அடுத்து இலக்கை ஜெட் வேகத்தில் விரட்டிய இந்திய அணியில், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 198 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 63 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார். அதில் 17 பௌண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அரைசதம் கடந்தார். தீப்தி ஷர்மா 72 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய ஸ்நேஹ் ராணா 35 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் 369 ரன்களில் ஆட்டமிழந்தது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest