6891e034d776d

கடந்த வாரம் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

நேற்று நாகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் விஜய்யைக் காண ஏராளமான கூட்டம் கூடியிருக்கிறது. அங்கு பேசிய விஜய், “தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது நாகை மாவட்டம். ஆனால் நவீன வசதி, மாடர்ன் தொழிற்சாலைகள் இங்கு இல்லை.. அதுமட்டும் இல்லாமல், அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், குடிசைகள் அதிகம் இருக்கும் ஊரும் நாகப்பட்டினம் தான்.

vijay

இந்த முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது போதாதா? மக்கள் இப்படி தவிப்பதும் போதாதா? இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் அதற்கான காரணம், தீர்வு பற்றியும் ஏற்கனவே மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது ஒரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பது நம்மளுடைய கடமை, உரிமை.” என்று பேசியிருந்தார்.

நாகையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று விஜய் பேசியதைக் கண்டித்திருக்கும் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க துணிச்சல் இல்லை. உண்மைக்கு புறம்பான பொய்களை விஜய் பரப்பி வருகிறார். நாகையில் முழுக்க முழுக்க பொய் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். தொடர்ந்து விஜய் பொய் கூறினால் மக்களால் நிராகரிக்கப்படும் நிலை உருவாகும். தமிழக ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலை இடத்தை விஜய் நிரப்பியுள்ளார்.

“வேண்டாம் சி.எம். சார், இந்த அடக்குமுறை” – நாகையில் விஜய்!

ஆளூர் ஷாநவாஸ்

விஜய் சொல்வது பொய்யான தகவல்கள்

அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவலை தெரிவிக்காமல், பொய்யான தகவல்களை விஜய் கூறி வருகிறார். இது நீடிக்காது. உண்மையிலேயே மக்களுக்கு என்ன தேவை என்பதன் அடிப்படையில் விஜய் நாகரிக அரசியல் செய்ய வேண்டும். புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்காமல், திமுகவை மட்டும் விமர்சித்து வருகிறார். அவர் மத்திய அரசின் மீதும் கூட பெரியளவில் விமர்சனம் வைக்கவில்லை. இதனால், அவருக்கு யாரோ அஜெண்டா கொடுத்தது போல தெரிகிறது.

பத்திரிகையாளர்களை சந்திக்க தைரியம் இருக்கிறதா

விஜய்க்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க தைரியம் இருக்கிறதா?

மக்களின் பிரச்னைகளை மையமாகக் கொண்டு விஜய் பேசியிருந்தால், நாகப்பட்டினத்தில் பொய் பரப்புரையே மேற்கொண்டு இருக்க மாட்டார். நாகப்பட்டினம் மக்களின் நிறைவேறாத கோரிக்கை குறித்து பேசியிருந்தால் அந்த மக்கள் நமது கோரிக்கைகளை பேசியுள்ளார் என்ற எண்ணம் எழுந்திருக்கும். சினிமாவின் கவர்ச்சியால் விஜய்க்கு கூட்டம் கூடியுள்ளது” என்று பேசியிருக்கிறார் ஆளூர் ஷாநவாஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest