
வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 – 72% இந்தியர்கள்!
இந்த நிலநடுக்கமானது மேகாலயாவின் வங்கதேச எல்லைக்கு அருகே இந்திய நேரப்படி காலை 11.49 மணிக்கு ஏற்பட்டது.
இருப்பினும், இதனால் மேகாலயாவில் எந்தவித சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.