ANI_20250908104012

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் – ராணுவம் இடையே தீவிர சண்டை இன்று(செப். 21) மூண்டுள்ளது. கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதிகளில் மூண்ட இந்த எண்கவுண்ட்டரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

உளவுப் பிரிவு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பகல் 1 மணியளவில் கிஷ்ட்வார் மாவட்ட வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தக்க பதிலடி ராணுவத்தால் அளிகப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Encounter breaks out between Army, terrorists in J-K’s Kishtwar

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest