G1Vac71bQAInHNN

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சில போலியான விமர்சனங்களை நம்பாதீர்கள் என்று பேசியிருக்கிறார் தனுஷ்.

இதுகுறித்து பேசிய தனுஷ், “படம் 9 மணிக்கு ரிலீஸ் என்றால் 12 மணிக்கு மேலதான் ரிவ்யூஸ் லாம் வரும். ஆனால் ஒரு சில ரிவ்யூஸ் 8 மணிக்கே வரும். அப்படி வரும் ரிவ்யூஸை எல்லாம் நம்பாதீங்க.

நீங்க படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க, இல்ல உங்க நண்பர்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க. சினிமாவை நம்பி பல பேர் இருக்காங்க. பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு. அதனால எல்லோருடைய படமும் ஓடணும். அது உங்க கைல தான் இருக்கு.சரியான விமர்சனங்களைப் பார்த்து அப்படங்களை பார்க்கலாமா ? இல்லையான்னு ? நீங்க முடிவு பண்ணுங்க” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest