AP25264389107443

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இன்று(செப். 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை(செப். 21) முதல் ‘சுதந்திர நாடாக பாலஸ்தீனம்’ என்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை பிரிட்டன் மற்றும் கனடாவின் பிரதமர்களும் வெளிப்படுத்தி பாலஸ்தீன மக்களுக்கான தங்களது ஒருமித்த ஆதரவை மீண்டுமொருமுறை உரைத்துள்ளனர்.

ஜி7 கூட்டமைப்பிலிருந்து முதல் நாடாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்திருப்பதும் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிரமாக தாக்குதல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் அமைதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய முக்கிய நகர்வாக பாலஸ்தீனம் சர்வதேச சமூகத்தால் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடியளித்து காஸா போரில் விரைவில் தீர்வு எட்ட வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UK, Canada and Australia announce formal recognition of Palestinian state

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest