
நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை நிரோஷாவின் தாயாரும், நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா இன்று மாலை இயற்கை எய்தினார். இவருக்கு வயது 86.

நடிகை நிரோஷா மற்றும் ராதிகா சரத்குமாரின் சமூக வலைதளப் பக்கங்களில் இவரின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.
வயது மூப்பு காரணமாக காலமாகியிருக்கிறார். கீதா ராதாவின் மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தாயின் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ராதிகா சரத்குமார், “மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் திருமதி.கீதா ராதா (வயது 86) அவர்கள் இன்று (21.09.2025) மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரின் உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…