ChatGPT-Image-Sep-22-2025-075537-AM

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஜி.எஸ்.டி 2.0’ இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வரிகள் இருந்து வந்தது. இன்று முதல், ஜி.எஸ்.டியில் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகள் மட்டுமே இருக்கப்போகின்றன.

5 சதவிகித வரி அத்தியாவசிய தேவை பொருள்களுக்கும், 18 சதவிகித வரி பிற பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் தாண்டி, ஆரோக்கிய கேடான பொருள்களுக்கு (Sin goods) 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இன்று முதல் அமலுக்கு வராது. இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை, இப்போதிருக்கும் வரியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி 2.0
ஜி.எஸ்.டி 2.0

இன்று முதல் எந்தெந்த அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி சதவிகிதம் குறைக்கப்படுகிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.

5 சதவிகிதமாக்க குறையும் அத்தியாவசிய மற்றும் பயன்பாட்டு பொருள்களின் பட்டியல்

() – கொடுக்கப்பட்டுள்ளது முன்னர் இருந்த வரி விகிதம்

பற்பொடி (12 சதவிகிதம்)

டூத் பிரஷ் (18 சதவிகிதம்)

டூத் பேஸ்ட் / டென்டல் ஃபிளாஸ் (18 சதவிகிதம்)

டாய்லெட் சோப் (18 சதவிகிதம்)

டால்கம் பவுடர் (18 சதவிகிதம்)

தலைமுடி எண்ணெய், ஷாம்பூ (18 சதவிகிதம்)

ஷேவிங் கிரீம், லோஷன் (18 சதவிகிதம்)

மெழுகுவர்த்தி (12 சதவிகிதம்)

தீப்பெட்டி (12 சதவிகிதம்)

பால் புட்டி (12 சதவிகிதம்)

காட்டன் அல்லது ஜூட் ஹேண்ட் பேக் (12 சதவிகிதம்)

மண்ணெண்ணெய் பர்னர் அல்லது ஸ்டவ்கள் (12 சதவிகிதம்)

குடை (12 சதவிகிதம்)

தையல் மெஷின் (12 சதவிகிதம்)

சைக்கிள் (12 சதவிகிதம்)

உணவுப்பொருள்கள்

நெய், வெண்ணெய் (12 சதவிகிதம்)

உலர் பழங்கள் (12 சதவிகிதம்)

பாஸ்தா (12 சதவிகிதம்)

ஐஸ் கிரீம் (18 சதவிகிதம்)

பழம் மற்றும் காய்கறி ஜூஸ்கள் (12 சதவிகிதம்)

நெய்
நெய்

வரி எதுவும் இல்லை

பன்னீர் (5 சதவிகிதம்)

பிசா பிரெட் (5 சதவிகிதம்)

பரோட்டா வகையான பிரெட்டுகள் (18 சதவிகிதம்)

காக்ரா, சப்பாத்தி, ரோட்டி (5 சதவிகிதம்)

18 சதவிகித வரியாகக் குறைக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள்

ஏ.சி (28 சதவிகிதம்)

டிஷ் வாஷிங் மெஷின் (28 சதவிகிதம்)

டி.வி, மானிட்டர், பிரோஜெக்டர் (28 சதவிகிதம்)

18 சதவிகிதமாக்க குறைக்கப்படும் வாகனங்கள்

பெட்ரோல் மற்றும் பெட்ரோல் – ஹைபிரிட், எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி. கார்கள் (1200 சிசி மற்றும் 4000 மில்லி மீட்டரைத் தாண்டக்கூடாது) – (28 சதவிகிதம்)

டீசல் மற்றும் டீசல் – ஹைபிரிட் கார்கள் (1400 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டரைத் தாண்டக்கூடாது) (28 சதவிகிதம்)

மூன்று சக்கர வாகனங்கள் (28 சதவிகிதம்)

350 சிசி மற்றும் அதற்குக் குறைவான மோட்டார் சைக்கிள்கள் (28 சதவிகிதம்)

பொருட்களைக் கொண்டு செல்வதற்கான மோட்டார் வாகனங்கள் (28 சதவிகிதம்)

முழு பட்டியலைப் பார்க்க இந்த Pdf-ஐ டௌன்லோடு செய்யுங்கள்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest