
திருப்பதி கோயிலை அரசியலுக்காகப் பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் – பாஜகவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியலில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, விடியோ ஆதாரத்துடன் பாஜக புகார் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த திருட்டுச் சம்பவத்தில், மொத்த பணமும் வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஏழுமலையான் பெயரை தெலுங்கு தேசம் கட்சி தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில், தங்களது ஆட்சியின் தோல்வியை மறைக்க, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், இறைவன் வெங்கடேஸ்வராவின் பெயரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது.
இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொடுத்திருக்கும் விளக்கத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவாரி ஹம்பியின் உண்டியல் பணத்திலிருந்து அமெரிக்க டாலர்களை திருமலை திருப்பதி கோயில் ஊழியர்கள் திருடினர். இது குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட்டு, கோயில் உண்டியலில் திருடி சேர்த்ததாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில், அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால், வேண்டும் என்றே, சந்திரபாபு நாயுடுவும், லோகேஷ் இருவரும் உண்மையைத் திரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருப்புகிறார்கள். இது, கடவுள் வெங்கடேஸ்வராவின் பெயரை, அவர்களது மோசமான அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மேலும், இதுபோன்ற ஒரு திருட்டு, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் நடந்திருந்தால், மீட்கப்பட்ட சொத்துகள் திருப்பதி திருமலைக்கு சென்றிருக்குமா? இல்லை தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்றிருக்குமா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், எவ்வாறு ஆன்மிகத் தலங்களின் பெயர்களை, அவர்களது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை புனைகிறார்கள் என்று தெரிந்து, புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.
ரூ.100 கோடி திருட்டு?
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருமலை திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி திருடப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி விடியோ வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே, திருப்பதி திருமலை பிரசாதமான லட்டு தயாரிக்க விலங்குக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, அது நீதிமன்றம் மூலம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அரசியலில் திருப்பதி திருமலை கோயில் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் எண்ணும் இடமான பரகாமணியில் கோயில் ஊழியர் உண்டியல் பணத்தைத் திருடியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ என்று சில காட்சிகளையும் வெளியிட்டிருந்தார்.
The YSR Congress has questioned the Telugu Desam Party-BJP, which rules Andhra Pradesh, about whether it is using the Tirupati temple for politics.
இதையும் படிக்க… ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகளுக்கு ஆபத்து! ரயில்வேக்கு புதிய தலைவலி