1378370

ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார்.

ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்பட்டு வந்​தது. அப்​படிப்​பட்ட தீரம் மிகுந்த இந்​திய வீரர்​களுக்கு இங்கு அஞ்​சலி செலுத்​து​வது பெரு​மை​யாக உள்​ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest