rahul-ganthi

ஜனநாயகம் மீதான தாக்குதல் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கொலம்பியாவில் உள்ள என்விகாடோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை, தொழில்நுட்ப வலிமை மற்றும் சுகாதார அமைப்பு காரணமாக நமது நாடு மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆனால், நாடு கடுமையான ஆபத்துகளையும் எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப்பெரிய ஆபத்து. உண்மையில் இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துக்கள் இருக்கின்றன. தற்போது, இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடந்து வருகிறது” என்றார்.

2016 ஆம் ஆண்டு பாஜக அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை ராகுல் காந்தி விமர்சித்த ராகுல் காந்தி, “கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் பாஜகவினர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால், அது வேலை செய்யவில்லை. கொள்கை ரீதியில் அது ஒரு தோல்வியான நடவடிக்கை” என்றார்.

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இருந்து ஆளும் பாஜக அரசை அவர் தாக்கிப் பேசி விமர்சிப்பது இது முதல் முறையல்ல.

2018 ஆம் ஆண்டு, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு சென்றபோது, ​​வேலையின்மை குறித்த மக்களின் கோபத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதற்காகக் கூறி பிரதமர் நரேந்திர மோடியை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிட்டு, அவர் ‘தேசபக்தியற்றவர்’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது, “இந்தியாவின் ஆன்மா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்றும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

2024 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று கூறியிருந்தார்.

From Colombia, Rahul Gandhi warns of ‘wholesale attack on democracy’ in India

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest