
பெங்களூருவில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 97.
தய்யில் ஜேக்கப் சோனி ஜார்ஜ் என்று புகழப்பட்ட டி.ஜே.எஸ். ஜார்ஜ், 1950 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் தி ஃப்ரீ பிரெஸ் ஜர்னலில் தனது பத்திரிகையாளர் பயணத்தைத் தொடங்கினார்.
2022 ஆம் ஆண்டு வரை தன்னுடைய 93 ஆம் வயது வரை இதழியல் துறையில் பணியாற்றிய ஜார்ஜ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலையங்க ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
பெரும்பாலும் நையாண்டி மற்றும் கிண்டல் நிறைந்த எழுத்துகளுக்குப் பெயர் பெற்றவரான ஜார்ஜ், கேரளத்தில் பிறந்திருந்தாலும், பெரும்பால காலத்தை பெங்களூருவில் கழித்துள்ளார்.