get-1

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது அதன் ப்ரீக்வலாக ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் நேற்று (அக்.2) வெளியானது. ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

`காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் யஷ் `காந்தாரா சாப்டர் 1′ படக்குழுவினரைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “‘காந்தாரா சாப்டர்-1’ திரைப்படம் கன்னட சினிமாவிற்கும், இந்திய சினிமாவிற்கும் ஒரு புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கித் தந்திருக்கிறது.

உங்கள் நம்பிக்கை, அர்ப்பணிப்பு எல்லாம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. எழுத்தாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும், உங்களுடைய விஷன் திரையில் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது.

Kantara Chapter 1
Kantara Chapter 1

தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே இப்படத்திற்குக் கொடுத்த ஆதரவு திரைப்படத் துறையின் தரத்தைக் கூடுதலாக உயர்த்தி இருக்கிறது.

ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினட், ராகேஷ் பூஜாரி ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

‘காந்தாரா சாப்டர்-1’ படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒருவித அசத்தலான, அபூர்வமான சினிமாவை உருவாக்கியுள்ளீர்கள்” என்று யஷ் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest