`மான் கராத்தே’, `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல’.
அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.15) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், ” `ரெட்ட தல’ படம் ஒன்றரை வருடத்திற்கான உழைப்பு.
இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘வணங்கான்’ படத்திற்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது தான் இயக்குநர் இந்தக் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே பிடித்துவிட்டது.
இது ஒரு தியேட்டரிக்கல் படமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலை தனுஷ் ப்ரோ பாடியிருக்கிறார்.
‘இட்லி கடை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது தனுஷ் ப்ரோவிடம் `ரெட்ட தல’ படத்தின் ஒரு சில காட்சிகளைக் காண்பித்தேன்.

அவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இந்தப் படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது. எல்லோருக்கும் `ரெட்ட தல’ படம் நிச்சயம் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.