
மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் என பத்து சம்பவங்களில் இதுவரை 14 பேர் பலியாகினர். அதே நேரத்தில் காணாமல் போன 31 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மண்டி மாவட்டத்தில் உள்ள தல்வாரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பின்போது வீட்டின் வெளியே இருந்த குழந்தை நீதிகாவின் தந்தை ரமேஷ் குமார்(31) நீர் ஓட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடல் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் ரமேஷை தேடிச் சென்ற நீதிகாவின் தாயார்(24), பாட்டி பூர்ணு தேவி(59) ஆகியோரும் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்கள் இருவரும் மேக வெடிப்பில் அடித்துச் செல்லப்பட்டனரா அல்லது இறந்துவிட்டனரா என்று இன்னும் எந்த நிலவரமும் தெரியவில்லை.
இதனால் 10 மாத குழந்தை நீதிகா வீட்டில் தனியாக இருந்துள்ளது. குழந்தை அழுவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான பிரேம் சிங், ரமேஷின் உறவினரும், முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாகுரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பல்வந்திடம் அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து பல்வந்த் கூறுகையில், குழந்தை எங்களிடம் உள்ளது. நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சோகம் பற்றி கேள்விப்பட்ட பிறகு குழந்தைக்கு உதவ மக்கள் பலர் முன்வருகிறார்கள் என்றார். இதனிடையே நீதிகாவின் செலவுகளுக்காக அவரது உறவினர்களுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!
Ten-month-old Neetika is probably the lone survivor of her family, whose three members were either washed away or died in a cloudburst that hit Talwara village in Mandi district.