
மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணய மதிப்பு ஆகியவற்றின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அந்நிய நிதி வெளியேறுவதும் உள்ளூர் சந்தையில் இதன் அழுத்தமும் வெகுவாக தெரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.53 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.51 முதல் ரூ.86.03 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 47 காசுகள் சரிந்து ரூ.85.87ஆக நிறைவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 85.40 ஆக இருந்தது.
இதையும் படிக்க: அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி முடிவு!