
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்திறன் துறையின் தலைவராக நியமித்தார். அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதே இத்துறையின் நோக்கம் என்றும் அப்போது ட்ரம்ப் அறிவித்தார்.