நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.

லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 முதல் ஜூலை 7 வரை மொத்தம் 17 நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்புகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) போா் தளவாடங்கள் ஆராய்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆா்டிஇ), இந்திய கடற்படையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் இந்த ராக்கெட் எதிா்ப்பு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டன.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் அமைப்பு நீா்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளக் கூடிய தாக்குதலை தடுப்பதோடு இந்திய கடற்படையின் ராக்கெட் ஏவுதளங்களில் இயங்கும் திறனுடையது.

நீண்ட தூர இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் இந்த ராக்கெட் அமைப்பு விரைவில் இந்திய கடற்படையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த ராக்கெட் அமைப்பை வடிவமைத்த டிஆா்டிஓ உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா். இந்த ராக்கெட் அமைப்பின் மூலம் இந்திய கடற்படையின் தாக்குதல் திறன் அதிகரிக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest