
ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நதிவே (நிலவே) எனும் முதல்பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
A melody that will echo through your soul ✨#TheGirlfriend first single – #Nadhive | #Nadhiye | #HuiRe | #Nilave | #Swarave out on July 16th ❤️
A @HeshamAWMusic musical delight ✨@iamRashmika @Dheekshiths @23_rahulr @GeethaArts #AlluAravind #VidyaKoppineedi @Vishwakiranloka… pic.twitter.com/DEpKPYpd4E
— Geetha Arts (@GeethaArts) July 12, 2025