
தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.
சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. அனைத்துப் போராட்டங்களுக்கு பின்பற்றப்படும் விதிகளே தவெக போராட்டத்திற்கும் பொருந்தும்.
தவெகவினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை.
அனுமதி கிடைக்காது என நினைத்து அவர்களாகவே நீதிமன்றம் சென்றுள்ளனர். நவீன் ரூ.44 கோடி கையாடல் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்யும்போது மனம் மாறாமல் இருக்க கைகளை பின்னால் கட்டியுள்ளார்.
இதுவரை அறிவியல் பூர்வமாக நடந்த விசாரணையில் தற்கொலை போலத்தான் தெரிகிறது.
பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
ரூ.40 கோடி கையாடல் வழக்கை கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து இருக்கக்கூடாது. திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனியை விசாரித்ததாகவும் தகவல் இல்லை. புகார் கொடுத்த உடனே எப்ஐஆர் போட முடியாது.
முகாந்திரம் இருந்தால் மட்டுமே நிதிமன்றம் எப்ஐஆர் போட வேண்டும் என கூறியுள்ளது என்றார்.