வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் ‘Mrs and Mr’. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே அவர் தெரித்திவிந்தார். இன்று (ஜூலை 11) ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “ரொம்ப எமோஷ்னலாவும் டென்ஷனாவும் இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறேன். ஏற்கெனவே பல பிரச்சனைகளை சந்தித்ததால், பார்த்துக்கொள்ளலாம் என ஒரு தைரியம் இருக்கு. இன்றைய தலைமுறைக்கு இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.
படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே. என் மகள் தெலுங்கில் நடிக்கப்போகிறார். அடுத்து தமிழில் நடிப்பார். என் மகளை நிறைய ட்ரோல் செய்கிறார்கள். விஜய்சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கும் இதுதான் நடந்தது. அதை மீறி, அவரின் ஹார்ட்வொர்க்கால் ஜெயித்து, நாளைய முதல்வர் என்ற அளவுக்கு பார்க்கிறோம்.
விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பாள். ஆரம்பத்தில் நயன்தாரா, திரிஷாவுக்கும் கூட இப்படிதான் நடந்தது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதில் பெருமைதான். ஆனால், இங்கு இருப்பவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…